ஐதராபாத் பெண் டாக்டர் உடல் முழுவதும் சிதறியிருந்த விந்தணுக்கள்! பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்த பகீர் தகவல்!

குற்றவாளிகளின் உயிரணுக்களும் பிரியங்காவின் உடலில் சிதறிக்கிடந்த உயிரணுக்களும் ஒன்றாக உள்ளதாக பிரியங்கா ரெட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்ற வாரத்தில் 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களை நோக்கி குற்றவாளிகள் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சிலர் காவல்துறையினர் நாடகமாடி இந்த என்கவுண்டர் சம்பவத்தை அரங்கேற்றி தவறாக கருத்துக்கள் கூறியிருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக மனித உரிமைகள் ஆணையம் கூறினர்.

இந்நிலையில் பிரியங்கா ரெட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையானது தற்போது மருத்துவமனை சமர்ப்பித்துள்ளது. பிரியங்காரெட்டியின் உடற்பாகங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உயிரணுக்கள் சிதறிக்கிடந்ததாக நிரூபணமாகியுள்ளது. குற்றவாளிகளின் உயிரணுக்களும் பிரியங்காரெட்டியின் உடற்பாகங்களில் சிதறி கிடந்த உயிரணுக்களிலும் ஒப்பாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரேத பரிசோதனை அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.