முன்னாள் அமைச்சரை கட்டிப்பிடித்து கதறிய திமுக பெண் வேட்பாளர்! அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு!

வேட்பாளர் பட்டியல் வெளியான உடன் திமுக பெண் வேட்பாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஐ கட்டிப்பிடித்து கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.


திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் 20 பேரின் பெயர் விவரங்களை அறிவித்தார். அந்த வகையில் தென்சென்னையில் போட்டியிடுவதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக திமுகவில் உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் தற்போதுதான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கட்சியின் தலைமை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வந்தார். தனது சகோதரிக்கு எம்பி தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து அவர் தனது சகோதரியை கட்டி அணைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் உணர்ச்சிப் பெருக்கால் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். பிறகு தமிழச்சி தங்கபாண்டியனை ஆறுதல் படுத்தி விட்டு அங்கிருந்து தங்கம் தென்னரசு புறப்பட்டுச் சென்றார்.

அண்ணா அறிவாலயத்தில் வைத்து தனது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு கட்டிப்பிடித்து திமுக பெண் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கண்ணீர் விட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.