திமுக பொதுச் செயலாளா் மற்றும் பேராசிரியருமான க.அன்பழகன், உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

வயோதிகம் காரணமாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்(வயது 98) தன்னுடைய வீட்டில் ஓய்வு நிலையில் இருந்து வந்தார். இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்சி நடவடிக்கைகளில் செயல்படாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஒய்வு நிலையில் இருந்து வந்த அவருக்கு வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது . ஆகையால் நேற்றைய தினம் சுமார் 8 மணி அளவில் சென்னையிலுள்ள கிரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் அப்பல்லோவில் அவரை அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அவருடைய உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் அதற்கு தேவையான சிகிச்சைகள் தாங்கள் அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் க.அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.