இலங்கையில் எண்ணெய் வர்த்தகம்! ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு செய்த திமுக வேட்பாளர்!

திமுக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் இலங்கையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.


அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக சார்பாக, வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இவர், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் இவர் தகவல் மற்றும்ஒலிபரப்புத் துறை இணையமைச்சராக பதவி வகித்திருந்தார். 

இந்நிலையில், ஜெகத்ரட்சகன், இலங்கையில் ரூ.26,000 கோடி முதலீடு செய்துள்ளதாக, அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்து பத்திரிகை வெளியிட்ட இதுபற்றிய செய்தியில், ஜெகத் ரட்சகனுக்குச் சொந்தமான சில்வர் பார்க் இன்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் இந்த தொகையை முதலீடு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனம், சிங்கப்பூர் சட்ட விதிமுறைகளின்கீழ் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாகும். இது தவிர, ஜெகத்ரட்சகன் வன்னியர் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார்.

இலங்கை உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சூழலில், திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன், சுயநலத்துடன் இவ்வளவு தொகையை இலங்கையில் முதலீடு செய்துள்ளார். இந்த செய்தி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.