எடப்பாடி மீது கொலைப் பழி! செட்டப் செஞ்சது ஸ்டாலின்! வெளியானது பக்கா ஆதாரம்!

கொடநாடு கொள்ளை மற்றும் கொலை விவகாரத்தில் தமிழ்க முதல்வர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. இப்போது அந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தி.மு.க.வின் சாயம் வெளுத்திருக்கிறது.





ஒவ்வொரு வீட்டுக்கும் பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் கொடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததுமே ஸ்டாலினுக்கு கதி கலங்கிவிட்டது. ஏனென்றால் இதே போன்று தீபாவளி, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் என்று பணம் கொடுக்கத் தொடங்கிவிட்டால், எடப்பாடிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகிவிடும் என்று பயந்தனர்.


இந்த நேரத்தில்தான் திடீரென கொடநாடு கொள்ளை மற்றும் கொலை மர்மத்துக்குப் பின்னே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று முன்னாள் தெஹல்கா ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஓர் ஆவணப்படம் வெளியிட்டார். அத்துடன் நில்லாமல் எடப்பாடி பழனிசாமிதான் குற்றவாளி என்று ஆணித்தரமாக பேட்டி கொடுத்தார்.


இந்தப் பேட்டி வெளியானதற்குப் பின்னே தி.மு.க. இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று டைம்ஸ் தமிழ்தான் முதன்முதலாக எடுத்துச்சொன்னது. ஏனென்றால், மேத்யூஸ்க்கு டெல்லியில் மீட்டிங் ஏற்பாடு செய்ததும், கொடநாடு ஆவணப்படம் தயாரிக்க தமிழகத்தில் உதவி செய்ததும் முழுக்க முழுக்க தி.மு.க.வின் ஐ.டி. விங்க். மாத்யூஸ்  அறிக்கையை முன்வைத்து, எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று தி.மு.க. கொந்தளித்தது.


உடனே எடப்பாடி மீது குற்றம் சாட்டிய சயான் மற்றும் மனோஜ் இருவரும் தமிழக போலீஸால் கைது செய்யப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு போலீஸ் செய்த முயற்சி தோல்வியைத் தழுவியது. அவர்கள் இருவரையும்  ஜாமீனில் விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்த விவகாரத்தில்தான் தி.மு.க.வின் சாயம் வெளுத்துப்போனது. ஆம், இரண்டு குற்றவாளிகளுக்கும் தி.மு.க.வை சேர்ந்தவர்களே ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க. வழக்கறிஞர்களே முன்னின்று வழக்கை நடத்தியிருக்கிறார்கள். ஜாமீன் கொடுத்த கதிர்வேலு, சுந்தர்ராஜ் ஆகியவர்கள் தி.மு.க. பிரமுகர்களுடன் நிற்கும் படம் வெளியாகிவிட்டதால், எடப்பாடி தெம்பாகிவிட்டார். அதனால்தான் வெள்ளியன்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கொடநாடு விவகாரத்தை வெளிப்படையாகப் பேசினார் எடப்பாடி.


“ஆதாரம் இருக்கிறதாம், அதனை நான் சொல்லி எடுக்கச் சென்றார்களாம் என மறைந்தவரின் பெயரைச் சொல்லி கட்டுக்கதை கூறுகின்றனர். கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கொடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது. பொய்யை சொல்வதென்றால் ஒழுங்காக சொல்லுங்கள். இன்றைக்கு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படிப்பட்ட தில்லு முல்லுக்களை செய்யப் பார்க்கின்றனர்” என்று குற்றம் சாட்டிய முதல்வர்,


இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால்,சயன், மனோஜ் இருவரையும் திமுகவினர்தான் ஜாமீனில் எடுத்துள்ளனர், ஆக சாயம் வெளுத்துவிட்டது. இவர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இவர்களுக்கு எந்த வழக்கறிஞரும் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தற்போது ஜாமீன் கிடைக்கிறதென்றால், யார் பின்புலமாக இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்’’ என்றும் விமர்சித்தார்.




மேலும்,  “இப்படிப்பட்டவர்களுடன் திமுகவுக்கு என்ன சம்பந்தம். மேலும் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு அரசியல் தலைவர்களை, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதுதான் குறிக்கோள். அந்தவகையில் செட்டப் செய்து வீடியோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளனர். இவையெல்லாம் திமுகவின் மூலம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட நாடகம். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்”  என்று கூறினார். 

ருவழியாக கொடநாடு மர்மத்தில் இருந்து எடப்பாடிக்கு விடுதலை கிடைத்திருக்கிறது, இது நிரந்தரமா என்பதுதான் தெரியவில்லை.