திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அதிகாலையில் திடீர் கைது..! அதிர வைக்கும் காரணம்! என்ன தெரியுமா?

திமுகவின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் முன்னணி சட்ட நிபுணர்களில் ஒருவருமான ஆர்எஸ் பாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிகாலை திடீரென கைது செய்தனர்.


சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில் பேசிய ஆர்.எஸ். பாரதி, "தி.மு.க. ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச். ராஜா பேசுவதற்கு அந்த தைரியத்தைத் தந்தது யார்? நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம். இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது. ஓப்பனா சொல்றேன். ஒரு ஹரிஜன்கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என்று பேசினார்.

தாழ்த்தப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் சென்னை தேனாம்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ஆர்.எஸ் பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பல்லாவரத்தில் உள்ள பாரதி வீட்டுக்கு அதிகாலையில் போலீசார் சென்றனர்.

பாரதியை விசாரணைக்கு என்று கூறி எழும்பூர் மத்திய குற்றப்பிரிபு போலீசார் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து ஆர்எஸ் பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். தாழ்த்தப்ப்டட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதால் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.