அணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்

வழக்கம் போலவே சீனியர் அமைச்சர்களுக்கும் வாரிசுகளுக்கும்தான் தி.மு.க.வில் சீட் ஒதுக்கி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதனால் புதியவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்


இதுதவிர, தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 15 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள் அதிமுக, பாஜக பக்கம் தாவ திட்டமிட்டுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் மைதீன்கான், ரங்கநாதன், வாகை சந்திரசேகர், டாக்டர் சரவணன் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏக்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இந்த முறையும் சீட் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு தலையில் இடி விழுந்தது போலாகிவிட்டது. கட்சித் தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கும் இவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ‘’உங்களை அவமதித்தவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்’’ என ஆதரவாளர்கள் பலரும் இவர்களை உசுப்பேற்றி வருகின்றனர்.

இதனிடையே கொதிப்பில் இருக்கும் இவர்களை தங்கள் பக்கம் கொண்டுவர பாஜக காய்நகர்த்தி வருகிறது. திமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்த கு.க செல்வத்திடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருசிலர் அதிமுகவின் கதவைத் தட்டத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வளைய வருகின்றன. இப்படி அணிமாற திட்டமிட்டிருப்பவர்களை திமுக தலைமையிலிருந்து தொடர்புகொண்டு,’’ அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். ஆட்சி அமைந்ததும் உங்களுக்கு வேறு மாதிவேறு மாதிரியான கவனிப்புகள் கிடைக்கும்’’ என சொல்லி வருகிறார்களாம்.

ஆனால், தங்களது ஏமாற்றத்தை காட்டும் வகையில், தங்கள் தொகுதி வேட்பாளர்களை தோற்கடிக்கச் செய்வார்கள் என்பதுதான் இப்போதைய நிலைமை.