நள்ளிரவிலும் நேர்த்தியான உடை! ஃபுல் மேக் அப்! மல்லிகைப் பூ! ரோட்டோரக் கடையில் டிஃபனை முடித்த தமிழச்சி!

சென்னை: எம்பி என்ற பந்தாவை விடுத்துவிட்டு, பெருங்குடியில் ஒரு தள்ளுவண்டி கடையில் உணவு சாப்பிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தற்போது பேசப்படும் ஆளாக மாறியுள்ளார்.


திமுக.,வின் தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினராக போட்டியிட்டு வென்ற தமிழச்சி தங்கபாண்டியன், பெருங்குடியில் உள்ள தள்ளுவண்டி கடையில், சாதாரண நபர் போல வந்து அமர்ந்தார். அவரை சிறிது நேரத்தில் தள்ளுவண்டி கடைக்காரர் அடையாளம் கண்டுகொண்டார்.

ஒரு எம்பி தனது ஓட்டலுக்கு சாப்பிட வந்ததை தள்ளுவண்டி கடைக்காரரால் நம்பவே முடியவில்லை. ஆனால், அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்களை தமிழச்சியை சுற்றி வளைத்து புகைப்படம் எடுக்க தொடங்கினர்.  

இதற்கு நடுவே, ஒரு முட்டை தோசை, ஒரு பொடி தோசையை ஆர்டர் செய்த தமிழச்சி, அவற்றை நிதானமாகச் சாப்பிட்டு முடித்தார். பிரச்சாரத்தின்போது இந்த கடையை பார்த்ததாகவும், ஒருநாள் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என ஆசை இருந்ததை தற்போது நிறைவேற்றி கொண்டதாகவும் இதுபற்றி தமிழச்சி விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம், அவரது புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.