கடுமையாக தாக்கிய கொரோனா..! உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ! கைவிரித்த ஹாஸ்பிடல்! வெண்டிலேட்டரில் ஜெ.அன்பழகன்!

திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட தீவிர சுவாசக்கோளாறு பிரச்சினையால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப் பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.


திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்டியூட் அண்ட் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அந்த தனியார் மருத்துவமனை அவரது உடல்நிலை பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீவிர சுவாசக்கோளாறு பிரச்சனை காரணமாக அவர் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஜெ அன்பழகன் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்தில் அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை இருந்ததால் சுவாசக் கருவி மூலமாக ஆக்சிஜன் உட்செலுத்தப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து சுவாசக் கோளாறு பிரச்சனை தீவிரமடைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. தற்போது அவருக்கு 80% ஆக்சிசன் வென்டிலேட்டர் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடைசி 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.