எளிமைக்கு எடப்பாடி.... பணம் பறிக்க ஸ்டாலின்..! தேர்தல் பிரசாரத்துக்கு டென்ஷன் ஆகும் தி.மு.க. நிர்வாகிகள்.

இப்போது அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க. சார்பில் ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இருவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தும் வருகிறார்கள்.


முதல்வர் எடப்பாடியை வரவேற்பதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மிகவும் ஆர்வம் காட்டிவரும் நிலையில், தி.மு.க. தலைவர் தங்கள் தொகுதிக்கு வரவே வேண்டாம் என்று டென்ஷன் ஆகிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள். காரணம் என்னவென்று கேட்டால் காசுதான் என்கிறார்கள். 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டாலின் இரண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்வுகளுக்கு மக்களை திரட்டுவதற்காக, ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் குறைந்தது 50 பேரை அழைத்து வரவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் தி.மு.க. உறுப்பினர்கள்தான் ஆர்வமாக வருகிறார்கள.

என்னதான் கட்சிக்காரர்களாக இருந்தாலும் உணவு மற்றும் வாகன கட்டணம் என அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இந்த வகையில், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து குறைந்தது 5 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில், ஒரு தொகுதிக்கான செலவு 10 லட்சம் ரூபாய் ஆகவும், இரண்டு தொகுதிகளுக்கான செலவு 20 லட்சம் ரூபாயாகவும் செலவிட வேண்டியிருக்கிறது.

அதைத் தவிர்த்து, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வு நடைபெறும் இடம், ஊருக்கு வெளியே திறந்த வெளியில்தான் நடைபெறுகிறது. அங்கு மேடை, பந்தல் அமைப்பதில் இருந்து, மைக் செட், அகண்ட எல்.ஈ.டி. டிவி அமைப்பதில் இருந்து அனைத்தும் பிரசாந்த் கிஷோர் போட்டுத் தந்த வரைப்படம் மூலம் தான் அமைக்க வேண்டியிருக்கிறது.

ஹைடெக் டெக்னாலாஜியை கையாள, அதற்குரிய தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவி தேவைப்படுகிறது. இவற்றோடு இந்த நிகழ்வுக்கான விளம்பரத்தையும் சேர்த்து பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க, அவர் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து தி.மு.க.கொடி, வரவேற்பு பேணர்கள் வைக்க வேண்டியிருக்கிறது.

இப்படி சில மணிநேர நிகழ்வுக்காக, அதுவும் தி.மு.க. கட்சிக்காரர்களிடம் உரையாற்றுவதற்காக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வுக்கு மட்டும் கிட்டதட்ட 50 லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது” என்று புலம்புகிறார் அந்த தென் மாவட்ட தி.மு.க.பிரமுகர்.

அதேநேரம் முதல்வர் எடப்பாடியார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால் எதுவும் தேவையில்லை. அவர் வேனில் இருந்தபடியே பேசிவிட்டு கலைந்து செல்கிறார். ஆட்கள் திரளவில்லை என்றால் மட்டும் ஆட்களை தேட வேண்டியிருக்கிறது. ஆகவே, செலவு இல்லை என்று சந்தோஷபப்டுகிறார்கள்.

மேலும், முதல்வரின் பேச்சு இயல்பாக இருக்கிறது. அதைப் பார்த்து முதல்வர் வெள்ளந்தியாக பேசுகிறார் என்கிறார்கள் மக்கள். அவரை புறக்கணிக்க நினைக்கிற பொதுஜனங்கள் கூட, அவரது வருகையையும், அவரது பேச்சையும் காது கொடுத்து கேட்க கூடுகிறார்கள்.

சொந்த கட்சி நிர்வாகிகளின் கஷ்டத்தைக்கூட தெரியாத ஸ்டாலின் எப்படித்தான் மக்களின் குறைகளைத் தீர்க்கப்போகிறாரோ..?