சுபஸ்ரீ மரணம்! அலட்சியப்படுத்திய பிரேமலதா! நேரில் சென்று நெகிழ வைத்த விஜயபிரபாகரன்! பெற்றோருக்கு கொடுத்த முக்கிய வாக்குறுதி!

பேனர் விவகாரத்தில் ஒரே கட்சியை சேர்ந்த தாயும், மகனும் எதிர்மறை கருத்துகளை தெரிவித்துள்ளது அக்கட்சியினருக்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


பேனர் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சீறிப்பாய்ந்த நிலையில், பேனர் விழுந்தது விதி என பிரேமலதா மேடையில் பேசியுள்ளார். 

கடந்த வாரம் பள்ளிக்கரணை அருகே அதிவேகமாக வீசிய காற்றில் சாலையில் நடுவில் உள்ள தடுப்பில் கட்டப்பட்டிருந்த பேனர் சரிந்து கீழே விழுந்தது. அப்போது எதிர்பாரத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கன்னிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் பேனர் கலாச்சாரத்தில் இருந்து வெளியில் வந்த நிலையில் சுபஸ்ரீயின் பெற்றோரை நேரில் சந்தித்து வருத்தத்தையும், ஆறுதலையும் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்த விஜய பிரபாகரன் சுபஸ்ரீயின் குடும்பத்தாருக்கு தன் ஆறுதலை தெரிவித்து, உணர்ச்சி பொங்க பேசினார். "சுபஸ்ரீ இழப்பு என்னை ரொம்பவே பாதித்தது. என்னை உங்க மகனாக நினைச்சுக்குங்க. என்ன உதவி வேண்டுமோ கேளுங்க.

எந்த நேரத்திலும் செய்து தருவேன் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பேனரால் ஏற்பட்ட விபத்துக்கு காரணமாக யார் இருந்தாலும் சரி, அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

3 நாட்களுக்கு முன்பு, ஆவடி கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது, "சுபஸ்ரீ மீது பேனர் விழுந்தது, லாரி வந்தது விதி. அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் இதனை பெரிதுபடுத்தி உள்ளார்" என்றார். ஒரே கட்சியில் தாய் வேறு கருத்தையும், மகன் வேறு கருத்தையும் கூறியதை அடுத்து எதை எடுத்துக் கொள்வது என தெரியாமல் தேமுதிகவினர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.