பிரேமலதா கட்சி நடவடிக்கையில் தலையிட்டதால் தான் தற்போது தேமுதிக சந்தி சிரித்துக் கொண்டிருப்பதாக கேப்டனிடம் நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.
பிரேமலதாவை இனி கட்சிக்குள்ள விடாதீங்க! கேப்டனிடம் கொந்தளித்த தேமுதிக நிர்வாகிகள்!

கூட்டணி தொடர்பாக ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவுடன்
பேச்சுவார்த்தை நடத்தி வரலாற்றில் மிக கேவலமான கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.
இதுநாள் வரை கூட்டணி பேச்சுவார்த்தயை சுதீஷ் தான் முன்னின்று நடத்தி வந்தார்.
ஆனால் இந்த முறை திமுக தரப்பை மாவட்டச் செயலாளர்கள் இளங்கோவன்
மற்றும் அனகை முருகேசன் அணுகிய போது தான் அவர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. துரைமுருகனை
சந்தித்த போது 4 தொகுதிகள் வரை தர தயாராக இருந்ததாகவும் ஆனால் பிரேமலதா அதற்கு மேல்
விட்டமின் ப எதிர்பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
பண விவகாரத்தில் பேரம் எட்டப்படாத நிலையில் தான் அதிமுகவுடன்
தேமுதிக பேசி வருவதாக துரைமுருகன் அக்கட்சி நிர்வாகிகளிடம் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த விவரத்தை அப்படியே
இளங்கோவனும், அனகை முருகேசனும் கேப்டனிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
மேலும் நமது கட்சி தற்போது சீரழிந்திருப்பதற்கு அண்ணியார்
தான் காரணம். தற்போது மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி அதிமுக மற்றும் பாஜக அரசுகள்
மீது அதிருப்தி நிலவுகிறது மக்கள் மத்தியில். அப்படி இருக்கும் போது பிரேமலதா ஏன் அதிமுகவுடன்
சேர துடிக்கிறார் என்றும் இளங்கோவன் மற்றும் அனகை முருகேசன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதே போல் தேமுதிகவின் ஒட்டு மொத்த மாவட்டச் செயலாளர்களும்
அதிமுக கூட்டணிக்கு எதிராக நிற்கின்றனர். மேலும் கூட்டணி விவகாரத்தில் இருந்து மட்டும்
அல்ல கட்சி நடவடிக்கையில் இருந்தும் பிரேமலதாவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கேப்டனிடம்
கொந்தளித்துள்ளனர்.