கள்ளக்குறிச்சியில் கேப்டன் மச்சான்! வெளியானது தேமுதிக வேட்பாளர் பட்டியல்!

தேமுதிக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.


அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் பெயர் விவரங்களை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

அதன்படி கள்ளக்குறிச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் தம்பியான எல்.கே சுதீஷ் போட்டியிடுகிறார். வட சென்னை தொகுதியில் தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன் ராஜ் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே சேலம் மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர்.

தேமுதிகவின் அவைத் தலைவர் டாக்டர் வி இளங்கோவன் திருச்சி தொகுதியில் தேமுதிக வேட்பாளராக களம் இறங்குகிறார். விருதுநகரில் தேமுதிகவின் விவசாய அணியை சேர்ந்த அழகர்சாமி போட்டியிடுகிறார்.

இவர்களில் அழகாபுரம் மோகன் ராஜ் மற்றும் அழகர்சாமி எம்.பி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. டாக்டர் இளங்கோவன் கடந்த 2009ம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

எல்.கே.சுதீஷ் கடந்த 2009 மற்றும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். 3வது முறையாக சுதீஷ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.