விஜய் டிவி டிடியை கட்டிப் பிடித்து கதறிய இளம் பெண் ரசிகை! ஏன் தெரியுமா?

பிரபல தொகுப்பாளினி ஒருவரை இலங்கையை சேர்ந்த பெண் கட்டிப்பிடித்துகொண்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளரான டிடி. இவருடைய முழுப்பெயர் திவ்யதர்ஷினி. இவர் சில நாட்களுக்கு முன்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை சென்றிருந்தார். 

இலங்கையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரை காண அவருடைய ரசிகர் பெருமக்கள் ஹோட்டலில் குவிந்தனர். 

டிடி தன்னுடைய ரசிகர்களிடம் மிகவும் அன்பாக பேசி கொண்டிருந்தார். சிலருடன் புகைப்படமும் எடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில் இலங்கை நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் டிடியின் பெரிய ரசிகர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவரை கட்டித்தழுவியுள்ளார். 

அப்போது அந்த இளம்பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த காட்சியை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.