ஃபானியின் ருத்ரதாண்டவம்! பிரமாண்ட கிரேனையே சாய்த்த அசுர வேகம்! பதை பதைக்க வைக்கும் சிசிடிவி!

ஒடிசாவில் கரையை கடந்த ஃபானி புயல் பிரம்மாண்ட கிரேனை சாய்த்தது.


தென்கிழக்கு வங்க கடலில் உருவான அந்த புயல் வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கியது. புயலின் கண் பகுதி ஒடிசாவின் பூரி நகரை நெருங்கியபோது மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அப்போது ஏராளமான கட்டிடங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்து விழுந்தன.

தலை நகர் புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டமைப்பையே அந்தப் புயல் உருக்குலைத்து சென்றது. இது தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்துக்கு அருகே வைக்கப்பட்டுள்ள கிரேன் புயல் தாக்கத்தால் அப்படியே சாய்ந்து விடுகிறது.

வீடுகள் மீது இந்த கிழே விழுந்து கட்டிடங்களை சிதைக்கும் அந்த வீடியோ காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. தற்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன அவை முடிந்த பின்னரே புயல் பாதிப்பு தொடர்பான முழு விவரங்கள் தெரியவரும்.