ஒரே நொடி கண் அயர்ந்து டிரைவர்! ஒரே குடும்பத்தின் 3 பேர் பலி! பதற வைக்கும் விபத்து!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே காரும் லாரியும் நேரெதிரே மோதிக்கொண்ட கொடூர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் முகமதுஷெரீப் .இவர் தனது தாயார் மற்றும் சகோதரிகள் உட்பட  ஐந்து பேருடன் நாகூர் தர்காவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு காரில் சேலம் நோக்கி புறப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையில் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே வேப்பூர் - சேலம் நெடுஞ்சாலையில் காருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்ப்புறத்தில்  வேகமாக சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் காரின் முன்பகுதி பயங்கர பாதிப்படைந்த நிலையில் முகமதுஷெரீப் , தாயார் ஷிராஜ்நிஷா, உறவுக்கார பெண் நசீமாபானு உள்ளிட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

விபத்தில் காயம் அடைந்த ஷெரீப்பின் சகோதரிகள் அசீராபீ, சுமையா  இருவரும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபடுள்ளனர். மேலும்  விபத்து குறித்து சிறுபாக்கம் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்