சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒன்றுதான் கிரிக்கெட் போட்டி ஆகும்.
வயதுக்கு வருவதற்கு முன்பே அந்த நடிகர் மீது ஆசை இருந்தது..! பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட சீக்ரெட்!

ஆண்கள் மட்டுமே சாதனை படைத்து வந்த இந்த கிரிக்கெட் போட்டியில் இன்றைய காலகட்டத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் 23 வயதே ஆகும் ஸ்மிருதி மந்தனா பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை தொடர்ந்து செய்த வண்ணம் உள்ளார்.
இவரே ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களைக் குவித்து இந்திய அளவில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முதலாவது இடத்திலும் உலக அளவில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இருந்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 4 சதங்களையும் 17 அரை சதங்களையும் இவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே ஸ்மிரிதி மந்தனாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களோடு கேள்வி-பதில் விளையாட்டில் பங்கேற்றார். அந்த கேள்வி பதில் விளையாட்டில் பலரும் பல கேள்விகளை அவரிடம் கேட்டனர்.
அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு " உம் ... ஒருவேளை" என்று இரண்டு சிந்தனை ஈமோஜிகளுடன் ஸ்மிரிதி பதிலளித்தார். மேலும் தனக்கு பத்து வயது இருக்கும் போது முதலே ஹிருதிக் ரோஷன் மீது கிரஸ் இருந்ததாகவும் இவர் கூறியுள்ளார்.
தற்போது ரசிகர்களோடு அவர் பங்கேற்ற கேள்வி பதில் விளையாட்டு பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.