மொத்த டீம் ஸ்கோர் 7! 7 ரன்களுமே எக்ஸ்ட்ராஸ்! ஒட்டுமொத்த டீமேட் டக் அவுட்! கிரிக்கெட் வரலாற்றில் ஆச்சரியம்!

மும்பையில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் 11 பேட்ஸ்மேன்களும் ஒரு ரன் கூட எடுக்கத் தவறியதுடன், அணி 754 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


புதன்கிழமை (நவம்பர் 20) 16 வயதுக்குட்பட்ட ஹாரிஸ் ஷீல்ட் ஆட்டத்தில், அந்தேரியின் குழந்தைகள் நல மையப் பள்ளி, சுவாமி விவேகானந்த் சர்வதேச பள்ளிக்கு எதிராக ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

போரிவலியில் உள்ள சுவாமி விவேகானந்த் சர்வதேச பள்ளி 45 ஓவர்களில் 761/4 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மீட் மாயேக்கர் 134 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 56 பவுண்டரிகளுடன் 338 ரன்களை குவித்தார்.

குழந்தைகள் நலன் மையப் பள்ளி, மொத்தத்தில் ஆறு ஓவர்களில் 7 ரன்களுடன் வெளியேறியது. அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆகினர்.அந்த 7 ரன்களுமே எக்ஸ்ட்ரா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின்

அலோக் பால் மூன்று ஓவர்களில் மூன்று ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார், தோல்வியுற்ற அணியின் கேப்டன் ஹர்ஷ் மிஸ்ரா கூறுகையில், “கடந்த ஆண்டு அணியின் இடம்பெற்று இருந்த ஒரே வீரர் நான் மட்டும்தான். மற்ற அனைத்து வீரர்களும் புதியவர்கள் அவர். நாங்கள் எட்டு முதல் ஒன்பது வரை பல கேட்சுகளை கைவிட்டோம், அதனை எங்களுடைய எதிரணி முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். ”

வெற்றிபெற்ற சுவாமி விவேகானந்த் பள்ளியின் பயிற்சியாளர் மகேஷ் லோட்லிகர் செய்தியாளர்கள் இடத்தில் பேசும்போது “நாங்கள் பேட் செய்த விதம் அவர்கள் உள்ளே செல்லும்போது அவர்கள் மனதளவில் நம்பிக்கையை குறைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் இதற்கு முன் 60-70 என்ற கணக்கில் அணிகளை வீழ்த்தியுள்ளோம், ஆனால் நான் இம்மாதிரியான சூழ்நிலை ஒருபோதும் ஏற்பட்டது கிடையாது என்று கூறினார்.