மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிராவோ! காரணம் இதுதான்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனை மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ நேரில் சந்தித்து உள்ளார்.


நடிகர் கமல்ஹாசனுக்கு சில மாதங்களுக்கு முன்னால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது இதன் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு கடந்த மாதம் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். இதனையொட்டி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் . 

தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு நல்லபடியாக திரும்பிய கமல்ஹாசன் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ சென்னை எம்ஆர்சி நகரில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார். 

மரியாதை நிமித்தமாக கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிராவோ அவரது கையெழுத்திட்ட டி-ஷர்ட்டை கமல்ஹாசனுக்கு கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.