பசுவின் கோமியம் மிக விரைவில் மருந்துப் பொருளாக அறிவிக்கப்படும்! கோவையில் அதிர வைத்த மத்திய அமைச்சர்!

மிக விரைவிலேயே கோமியம் மருத்துவ பொருளாக அறிவிக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக அஸ்வினிகுமார் சௌபே என்பவராவார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராமகிருஷ்ணா மருத்துவமனை அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவிகளை அவள் தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில், "2025-ஆம் ஆண்டில் காச நோயில்லாத இந்தியா உருவாக்கப்படும். கேன்சர் போன்ற நோய்களுக்கு இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கபட உள்ளன.

தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரியை  நிறுவுவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட 1 லட்சம் மருத்துவ கல்வியிடங்கள் வருகிற 5 ஆண்டுகளில் நிறுவப்பட உள்ளன‌.

மாட்டுக்கோமியத்தை மருத்துவ பொருளாக விரைவில் அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா சித்தா யுனானிஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

இந்த நிகழ்வில் துறைசார்ந்த பிற முக்கிய தலைவர்களும் இடம்பெற்றனர்.