திருவாரூர் To லெட்சுமணாங்குடி! நடு ராத்திரி! சாலையில் நின்ற பசு! வேகமாக வந்த பைக்! நொடியில் அரங்கேறிய பயங்கரம்!

நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த மாடு மீது மோதியது இளைஞர் உயிரிழந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டத்திற்கு அருகே லெட்சுமாங்குடி எனும் இடம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக, இங்கிருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில்  மாடுகள் கூட்டமாக சாலையை மறைத்து நின்றுகொண்டிருந்தது, அப்பகுதியின் வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக அமைந்திருந்தது. 

மாடுகள் சாலையின் நடுவே நிற்பதால் அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணமிருந்தன. நேற்று இரவு அப்பகுதியின் சாலையின் நடுவே மாடு நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மாட்டின் மீது வேகமாக மோதினார்.

மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். சில நிமிடங்களுக்கு பிறகு மாடும் உயிரிழந்தது. இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.