ஓரினச் சேர்க்கை! கோவிலில் தாலி கட்டி தங்கையை திருமணம் செய்து கொண்ட அக்கா!

2 சகோதரிகள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கோயிலில் ஆர்ப்பாட்டம் செய்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரோஹானியா பகுதி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. திடீரென்று நேற்று முன்தினம் 2 பெண்கள் இந்த கோவிலினுள் நுழைந்தனர். அங்கிருந்த புரோகிதரிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். இதற்கு அந்த புரோகிதர் மறுப்பு தெரிவித்தார்.

சுடிதார் அணிந்திருந்த அந்த 2 பெண்கள் கோவிலினுள் அமர்ந்தனர். தங்களுக்கு திருமணம் நடக்கும்வரை கோவிலை விட்டு வெளியே வர மறுத்துவிட்டனர். ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி அந்த புரோகிதர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இவர்களின் திருமணத்தை குடும்பத்தினர் ஏற்கனவே எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்யாணம் நிகழ்ந்தபோது கோவிலினுள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் எந்தவித அசம்பாவித நிகழ்வும் நிகழ்வதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறினர். பின்னால் சமூக வலைத்தளத்தில் தங்கள் திருமண புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் சிலர் அந்த புரோகிதரை வறுத்தெடுத்து வருகின்றனர்.