பிரபல நடிகையின் கற்பழிப்பு தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பிரபல நடிகையின் கற்பழிப்பு வீடியோவை பார்க்க நடிகருக்கு அனுமதி! வழக்கில் புதிய திருப்பம்!
பிரபல நடிகையின் கற்பழிப்பு தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு, மெமரி கார்டின் நகலைப் பெறுவதற்காக மலையாள நடிகர் திலீப் தொடர்ந்த வழக்கை விசாரித்தனர்.
முன்னதாக மெமரி கார்டு ஆவணம் என்பது சான்றிதழ் சட்டத்தின் கீழ் போலீசார் அறிக்கையின் ஒரு பகுதியாக தாக்கல் செய்தனர். இந்த ஆவணம் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் காணப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டவர் நடிகர் திலீப் ஆவார். குற்றத்தின் படங்கள் அடங்கிய மெமரி கார்டு நகலை தன்னிடம் தருமாறு நடிகர் திலீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் முக்கியமான ஆதாரமாகக் கருதப்படும் மெமரி கார்டு பெறுவதற்கு தனக்கு என் முழு உரிமை இருப்பதாகவும், நடிகைக்கும் தனக்கும் முன்னதாக இருந்த பகையின் காரணமாக இந்த வழக்கில் தன்னை சிக்க வைத்து இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
வீடியோவில் உள்ள காட்சிகள் வேண்டுமென்றே நடிகர் திலீப்பை சிக்க வைப்பதற்காக சித்தரிக்கப்பட்டது என்று நடிகர் திலிப்பின் வழக்கறிஞர் வாதாடினார்.
ஆகையால் அவரை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க மெமரி கார்டின் நகலை தருமாறு திலீப் தரப்பு வழக்கறிஞர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மெமரி கார்டில் இடம் பெற்றுள்ள வீடியோவை பார்க்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.