திருமணத்திற்கு முன்பே உறவு! கர்ப்பம்! கருக்கலைப்பு! பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

திருமணத்திற்கு முன்பே கருவுற்ற பெண், கருவை கலைத்து குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவமானது மொரோக்கோவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மொரோக்கோ நாட்டில் ஹஜர் ரைசவுனி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 28. இவர் அந்நாட்டிலுள்ள இளம் பத்திரிகையாளர்களில் ஒருவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சூடான் நாட்டை சேர்ந்த ஒரு நபரை காதலித்து வந்தார். திருமணம் செய்வதற்கு முன்பாகவே இருவரும் உல்லாசமாக பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தனர். இதனால் ஹஜர் கர்ப்பமானார்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருவரும் மொரோக்கோ நாட்டில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு இருவரும் கருக்கலைப்பிற்கு சென்றனர். எப்படியோ இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் வெளியே வந்த ஹஜரையும் அவருடைய காதலருடன் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரும் கருக்கலைப்பிற்கு ஆக மருத்துவமனைக்கு சென்றதாக காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

ஆனால் இதற்கு ஹஜர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கானது 2 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹஜர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "என்னுடைய கட்சிக்காரர் ரத்தப்போக்குகாகவே மருத்துவமனைக்கு சென்றார். அவர் கருக்கலைப்பிற்கு மருத்துவமனைக்கு செல்லவில்லை. இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்" என்று வாதிட்டார்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் 1 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குறிப்பிட்ட மருத்துவமனை மீது காவல் துறையினருக்கு சந்தேகம் இருந்துள்ளதாகவும், தீவிர கண்காணிப்பில் இருக்க பிறகு கைது நடவடிக்கை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் மருத்துவம் அளித்த மருத்துவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், செவிலியர்களுக்கு பணி நீக்கம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவமானது மொரோக்கோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.