இறந்த பெற்றோர் உடலில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயதுக் குழந்தை! பிரிட்டன் பரிதாபம்!

இளம் தம்பதியினர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் ஸ்டாஃபோர்ட்ஷைர் எனும் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு கிரில் என்பவர் வசித்து வந்தார். என்னுடைய வயது 32. இவருடைய மனைவியின் பெயர் லானா. லானாவின் வயது 23. இத்தம்பதியினருக்கு 2 வயது குழந்தையுள்ளது.

நேற்று மாலை இருவரும் சொந்த வீட்டில் சுயநினைவை இழந்து கிடந்ததாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீட்டிற்கு வந்தபோது தம்பதியினர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அந்தக் குழந்தை எந்தவித காயமும் இன்றி விளையாடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குழந்தையானது பெற்றோரின் உறவினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தம்பதியினர் வாழ்ந்து வந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில், "3 ஆண்டுகள் இந்த வீட்டில்தான் வசித்து வந்தனர். இங்குதான் லானாவுக்கு குழந்தை பிறந்தது. அவர்கள் என்னுடன் நன்றாகவே பழகி வந்தனர். வாடகை பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் தவறாமல் கொடுத்து வந்தனர். அவர்களுடைய இழப்பு தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது" என்று கூறினார்.

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.