சென்னையில் குடிபோதையில் மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டியதை பார்த்து ஆத்திரமடைந்த மற்றொரு மகன் அவரை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொரோனாவால் முடங்கியிருந்த வீடு முழுவதும் ரத்தக்கறைகள்..! சடலமாக மீட்கப்பட்ட தந்தை உடல்..! மகன் செய்த கொடூரம்! அதிர்ச்சி காரணம்!

ஊரடங்கால் உலகமே முடங்கிப் போய் உள்ளது. இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டதால் வீடுகளே பலருக்கு சிறைச்சாலைகளாக மாறிப் போனது. சென்னை எண்ணூரில் ஊரடங்கு உத்தரவால் மனஉளைச்சலில் இருந்த நபர் குடிபோதையில் மனைவி, மகளை அரிவாளால் வெட்டினார். இதைப் பார்த்த அவரது மற்றொரு மகன் தாயையும், அண்ணனையும் காப்பாற்ற அப்பாவை கொலை செய்துவிட்டு போலீசாரிடம் சரண் அடைந்துவிட்டார்.
எண்ணூரில் நாகராஜ், தையல் நாயகி தம்பதியும், சேதுபதி, தமிழ்ச் செல்வன் என்ற மகன்களும் வசித்து வந்தனர். நாகராஜ் குடிபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். 2 நாட்களுக்கு முன்ன குடிபோதையில் இருந்த நாகராஜ் மனைவியிடம் மதுபானம் வாங்க காசு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிப்போக குடிபோதையில் மனைவி தையல் நாயகியை அடித்துள்ளார்.
இதை மகன் தமிழ்ச்செல்வன் தட்டிக்கேட்டார். மேலும் ஆத்திரம் அடைந்த நாகராஜ் அரிவாளை எடுத்து மனைவியை வெட்ட முயன்றார். இதை மகன் தமிழ்ச்செல்வன் தடுக்க முயன்றார். இதனால் தமிழ்ச்செல்வன் கையில் அரிவாளால் வெட்டினார் நாகராஜ், மேலும் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மனைவியையும் அரிவாளால் வெட்டினார். அப்போது அங்கு வந்த மூத்த மகன் சேதுபதி அம்மாவும், தம்பியும் படுகாயங்களுடன் இருப்பதை பார்த்தார்.
பின்னர் நாகராஜ் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டினார் சேதுபதி. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை அடுத்து நேராக எண்ணூர் காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார் சேதுபதி. தையல்நாயகி, தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிபோதை பழக்கத்தால் ஒரு குடும்பம் தந்தையை இழந்துவிட்டது. வீட்டிற்கு ஆதாரமாக இருக்கும் மூத்த மகனை சிறைக்கு அனுப்பி உள்ளது.
கணவனும், மூத்த மகனும் இல்லாத நிலையில் இளையமகனுடன் எப்படி வாழப்போகிறோம் என்று தையல் நாயகி வேதனையில் உள்ளார். நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நாகராஜூக்கு எப்படி மதுபானம் கிடைத்தது என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.