கணவன் மூலம் கர்ப்பிணி மனைவிக்கு தொற்றிய கொரோனா..! ஆனால் குழந்தை பிறந்த பிறகு? டெல்லி அதிசயம்!

கொரனாவில் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு கொரனா தொற்று எதுவும் இல்லாததால் மருத்துவர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.


கொரனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்தார். தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி எடுத்தது. உடனடியாக மகப்பேறு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இதில் அந்த பெண்மணி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தாய்க்கு கொரனா பாதிப்பு இருப்பதால் குழந்தைக்கும் பாதிப்பு இருக்குமோ என்று அச்சம் அடைந்த மருத்துவர்கள் உடனடியாக அந்த சிசுவை பரிசோதனை செய்தனர். ஆனால் அப்படி எதுவும் அறிகுறி இல்லை என்றும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மகப்பேறு மருத்துவரான நீர்ஜா பாட்லா தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தாயிடமே குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 24 மணிநேரமும் தாய், சேய் இருவரையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

எந்தக் காரணத்தைக் கொண்டு தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரனா தொற்று பரவி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். இதுமட்டுமின்றி அந்த பெண்ணின் கணவரும் ஒரு மருத்துவர் அவருக்கு கொரனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.