கொரோனா மானிட்டரிங் ஆப்..! உங்களுக்கு கொரோனா இருக்கிறதா? ஒரே ஒரு செல்ஃபி எடுத்தால் போதும்! எப்படி தெரியுமா?

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிய ஒரு செல்ஃபி இருந்தால் போதும்.


இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக ஒரு புதிய ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டறிய முடியும். இந்த ஆப்பை ஸ்மார்ட்ஃபோனில் டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். பிறகு, இதனை பயன்படுத்தி செல்பி எடுத்து சென்னை பெருநகர மாநகராட்சிக்கு ஆப் மூலமாகவே அனுப்ப வேண்டும்.

அதை வைத்து, புகைப்படம் அனுப்பிய நபரின் வீட்டு முகவரியை கண்டறிந்து, மாநகராட்சி சார்பாக, மருத்துவக் குழு ஒன்று அனுப்பி வைக்கப்படும். அவர்கள் வீட்டிற்கு வந்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வார்கள். இந்த ஆப், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, வீட்டில் இருந்தபடியே, சோஷியல் தனிமைப்படுத்தலை பின்பற்றிக் கொண்டு, தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா அல்லது சாதாரண காய்ச்சல் உள்ளதா என்பதை சென்னை மக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்று, இதுபற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.