ரூபாய் நோட்டுகள் மூலமாகவும் கொரானா பரவும்..! ஆதாரம் உள்ளே..! உஷார் மக்களே!

கொரானா பாதித்தவர் பயன்படுத்திய ரூபாய் நோட்டுகள் மூலமாகவும் கூட கொரானா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


கடந்த 2018ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்டானா எனும் பகுதியில் புழக்கத்தில் இருந்த கரன்சி நோட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில் அந்த கரன்சி நோட்டுகளில்  எஸ்கெரிச்சியா கோலி, சால்மோனெல்லா டைபி மற்றும் மேலும் 2 நோய் கிருமிகள்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கிருமிகள் மனிதனுக்குள் பரவி அவர்களுக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தக்கூடியவை என்றம் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆய்வில் 96 வகையான கரன்சிகள், 48 நாணயங்களில் பேக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் போன்ற மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருந்தது உறுதியானது.

அமெரிக்காவில் கூட கடந்த 2014ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,000 வகை பேக்டீரியாக்கள், மனிதர்கள் பயன்படுத்தும் கரன்சிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அமெரிக்க அரசு, கொரானா பரவாமல் தடுக்க ஆசிய நாடுகளில் இருந்து வந்த டாலர்களை புழக்கத்தில் தற்போது விடவில்லை. 

உலக சுகாதார அமைப்பும், முடிந்த வரை டிஜிட்டல் பரிமாற்ற வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. கரன்சிக்களின் புழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. எனவே ரூபாய் நோட்டுகளை கையாளும் போது உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.