இன்று மாலை சிற்றுண்டிக்கு இதை செய்து பாருங்கள்!!!

போண்டாவில் பலவித வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்கவிருப்பது சுவையான கார போண்டா


தேவையானவை:

பச்சரிசி - அரை கப்,

புழுங்கலரிசி - அரை கப்,

துவரம்பருப்பு - அரை கப்,

கடலைப்பருப்பு - அரை கப்,

காய்ந்த மிளகாய் - 10,

பெருங்காயம் - 1 டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - அரை கப்,

சீரகம் - அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

உப்பு – ருசிக்கேற்ப,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.