வித்தியாசமான சுக்குச் சட்னி – செய்து பாருங்கள்!!!

சட்னியில் பலவகைகள் இருக்கின்றன. இந்தச் சட்னி சற்று வித்தியாசமானது. மேலும் செரிமானத்துக்கு உகந்ததும் கூட. இந்த சுக்குச் சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையானவை

வெல்லம் – 100 கிராம்

புளி – 100 கிராம்

மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி

சுக்கு பவுடர் – ½ தேக்கரண்டி

சீரகப்பவுடர் – ½ தேக்கரண்டி

செய்முறை

புளியையும் வெல்லத்தையும் தனித்தனியாக தண்ணீரில் ஊறப் போடவும். குறைந்த அளவு தண்ணீரில்தான் ஊறப் போடவேண்டும். நான்கு மணி நேரம் இவை ஊறிய பிறகு புளியை நார், கொட்டை எதுவும் இல்லாது கரைத்துக்கொள்ளவும். வெல்லத்தையும் கல், கரும்புச் சக்கை எதுவும் இல்லாது சுத்தம் செய்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வெல்லம், புளி கரைசல்களை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

இவற்றோடு மிளகாய் பவுடர், சுக்கு பவுடர், சீரகப் பவுடர் ஆகியவற்றை கலந்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பிலேற்றி மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கெட்டி ஆனதும் அடுப்பை விட்டி இறக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த சட்னி வெகு நாட்களுக்கு கெடாது. இது சமோசா போன்ற உணவு வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ்.