கோவையில் லாரி டயரில் சிக்கிய நடுத்தர வயது பெண்! அதிர வைத்த சம்பவம்!

வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மொட்டின் மீது மோதியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி என்னுமிடம் உள்ளது. இதற்கு அருகில் குமார் நகர் எனுமிடத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பிரியா. பிரியாவின் வயது 34. இருவரும் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று காலை பிரியா தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு மொப்பட்டில் சென்று கொண்டிருந்தார். கருமத்தம்பட்டி ஜங்ஷன் வழியாக ஊத்துக்குளியில் இருந்து கண்டெய்னர் லாரி கோவைக்கு வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற லாரி எதிர்பாராவிதமாக ப்ரியாவின் முகட்டின் பின்புறத்தில் மோதியது.

மோதிய அதிர்ச்சியில் பிரியா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அடுத்த நொடியிலேயே லாரியின் பின்புறம் டயரானது பிரியாவின் உடலில் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரியா உயிரிழந்தார்.

தகவலறிந்து கருமத்தம்பட்டி ஜங்ஷன் ரோடுக்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். சடலமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கருமத்தம்பட்டியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.