காங்கிரஸ் கட்சிக்கு உயிர் வந்தாச்சு..? மீண்டும் பதவிக்கு வருவாரா ராகுல்..?

நாடாளுமன்றத்தில் நாயடி பேயடி வாங்கியது காங்கிரஸ் கட்சி. அதனால் நிர்வாகிகள் அனைவரையும் சரி செய்யும் வரை கட்சிக்குள் தலைவராக வருவதில்லை என்ற உறுதியுடன் இருக்கிறார் ராகுல்.


இந்த நேரத்தில் இரு மாநில முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பூஸ்ட் ஆக அமைந்திருக்கிறது. மகாராஷ்டிரம், ஹரியானா உள்ளிட்ட தேர்தல் முடிவுகளை வைத்துப்பார்க்கும்போது காங்கிரஸ் இன்னும் மோடி,- அமித்ஷாக்களை உருட்டிப்புரட்டியெடுக்கும் வல்லமையோடு இருப்பது தெளிவாகிறது.

மராட்டியத்தில் பா.ஜ.க.வின் கையில் இருந்த 27 இடங்களைத் தட்டிப்பறித்துள்ளன காங்கிரஸும் இதர கட்சிகளும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த மாநிலங்களில் ஜெயிப்பது கடினம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை.

காஷ்மீர் விவகாரம் காரணமாக பா.ஜ.க.வுக்கு நாடெங்கும் பெரும் வரவேற்பு என்று பா.ஜ.க. தெம்பாக இருந்தது. அதற்கும் அடி விழுந்திருக்கிறது.

வழக்கம்போல் குழாயடி பஞ்சாயத்துகளை வைத்து ஹரியானாவில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால், பா.ஜ.க. வெற்றி பெற முடியாத வீரன் அல்ல என்பது இப்போது காங்கிரஸ்க்கு புரிந்து போயிருக்கும். இனி, ராகுல் தைரியமாக போராட களம் இறங்கலாம்.