தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த பிரியங்கா காந்தி..! தொடர்ந்து எழும் விமர்சனங்கள்..!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரியங்கா காந்தி இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மக்களின் பாதுகாப்பிற்காக தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான சட்டமும் வலுவாக இருக்கும் நிலையில் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தலைவர்களே அச்சட்டத்தை மீரும் பொழுது அது பெரும் சர்ச்சையாக மாறும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவருடன் பின்னால் அமர்ந்துகொண்டு பயணிக்கிறார். அப்போது வாகன ஓட்டும் நபரும் மற்றும் பிரியங்கா காந்தி இருவருமே ஹெல்மெட் அணியாமல் பயணிக்கின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடெங்கும் பெரும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அந்த வகையில் வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன அப்படியாக போராட்டம் நடைபெறும் பொழுது முன்னாள் ஐபிஎல் அதிகாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த ஐபிஎல் அதிகாரியின் குடும்பத்தினரை பிரியங்கா சந்திக்க சென்ற போதுதான் இருசக்கர வாகனத்தில் பயணித்திருக்கிறார். இதனால் பிரியங்கா காந்தி தற்போது மக்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.