நடிகர் ரஜினி கழுவுற மீனில் நழுவுற மீன்! பாஜக வலையில் சிக்க மாட்டார்! தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி திட்டவட்டம்!

பாஜக வலையில் நடிகர் ரஜனிகாந்த் சிக்கமாட்டார் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.


சமீபத்தில் நடந்துமுடிந்த துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றிய சர்ச்சையான கருத்துக்களை கூறி இருந்தார். இதனை எதிர்த்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தரப்பினரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பெரியார் பற்றிய சர்ச்சையான கருத்தை கூறுவதற்கு நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. 

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அதிரடியாக கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சிக்கு சார்பாக இருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. பெரியாரை விமர்சிக்க தெரிந்த ரஜினிக்கு , பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது துக்ளக் ஆசிரியர் சோ பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்ததை ஏன் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி நடிகர் ரஜனிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன் அவர் பாஜக வலையில் சிக்க மாட்டார் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.