விநாயகருக்கு மோதகத்தை படைப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளை விநாயக சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம் . இந்நாளில் விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை நிவேதனம் செய்து அவருடைய அருளாசி பெற்று வருகிறோம்.


விநாயகருக்கு பிடித்த பல பொருட்களில் முதன்மை வகிப்பது மோதகம். அரிசி மாவு , வெல்லப்பாகு மற்றும் தேங்காய் ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் இந்த மோதகம் விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவு என்று கூறப்படுகிறது. இந்த மோதகத்தில் மிகப்பெரிய ஆச்சரியப்படும் அளவிற்கு உண்மைகளும் ஒளிந்துள்ளன . 

மனிதர்களிடத்தில் மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று எண்ணி தான் மோதகத்தை விநாயகருக்கு படைக்கிறோம். மோதகத்தின் மேல்புற வெள்ளைநிற தோலானது அண்டம் என்று கூறப்படுகிறது அதற்குள் வைக்கப்படும் பூரணம் பிரம்மம் ஆகும்.  

மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல பண்புகளை பூரணம் போல மூடி மறைப்பது மாயை ஆகும். இந்த மாயை அகன்று விட்டால் உள்ளே உள்ள பூரணத்தை நம்மால் காண இயலும். பூரணம் என்பது மனிதர்களிடத்தில் காணும் நல்ல பண்புகளை குறிக்கிறது இதுவே மோதகத்தின் உண்மை கருத்தாக புராணங்கள் கூறுகின்றன. 

இந்த நல்ல கருத்துக்களை உணர்த்துவதற்காகவே மோதகத்தை நாம் விநாயகருக்குப் படைத்து அவரது அருளாசியை பெறுகிறோம்.