எனக்கு தாலி கட்டி குழந்தையை கொடுத்துட்டு சீதாவோட வாழ்கிறார்..!பிரபல டாக்டர் மீது கண்ணகி கூறிய பகீர் புகார்!

காரைக்குடியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.


காரைக்குடியில் பெரியார் நகரை சேர்ந்த குழந்தைகள் நல்ல டாக்டர் ராமசுப்பிரமணியம்(வயது 44) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணகி (34 வயது) என்ற பெண்ணை கடந்த 2007ஆம் ஆண்டு முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்களது திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 75 சவரன் நகை, ரூபாய் 8 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவர் ராமசுப்பிரமணியம் தன்னுடைய முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக சீதாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார் .

இதனை அடுத்து முதல் மனைவியை அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து கொடுமைப் படுத்தி இருக்கிறார். மேலும் மருத்துவரின் முதல் மனைவி தங்கள் வீட்டிலிருந்து அளிக்கப்பட்ட சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூபாய் .8 லட்சத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். அதனை திரும்பத் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மருத்துவர் ராமசுப்பிரமணியம்.

இதனையடுத்து முதல் மனைவியான கண்ணகி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் ராமசுப்பிரமணி பற்றி புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனை அடுத்து ராமசுப்பிரமணியன், சீதாலட்சுமி, பெற்றோர் ராமசாமி- ரமணி, சகோதரி மல்லிகா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.