அண்ணாமலை மீது காங்கிரஸ் வழக்கு, போலி ஆவண விவகாரம்

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நேரத்தில் திடீரென அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆவணத்தை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்ஹார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமித்ஷா என்று அத்தனை பேரும் தி.மு.க. மீது குற்றம் சாட்டினார்கள்.


அண்ணாமலை வெளியிட்ட ஆவணம் போலியாக தயாரிக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் அவர் மீது வழக்கு தொடுக்க முன்வந்திருப்பது பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற நேரத்தில் திடீரென அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆவணத்தை வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்ஹார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமித்ஷா என்று அத்தனை பேரும் தி.மு.க. மீது குற்றம் சாட்டினார்கள்.

தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த ஆவணம் பொய்யான ஒன்று தெரியவரவே, அண்ணாமலைக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘’கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது எனச் சொல்லும் ஒன்றிய பாஜ அரசு, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு மட்டும் எப்படி அந்த ஆவணங்களை கொடுத்தனர் எனத் தெரியவில்லை. அண்ணாமலைக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த ஆவணங்களை கொடுத்ததாக ஒரு அதிகாரி கையெழுத்திட்டுள்ளார்.

அவர் வெளியுறவுத் துறையில் பணியிலேயே இல்லை. பொய்யான தகவலை பாஜ மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை வெளியிடுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் இது தொடர்பாக பொதுவெளியில் பேசுகிறார். பிரதமர் மோடி அந்தக் கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிருகிறார். இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடுக்க உள்ளோம்.

ஒரு பிரதமர் என்பவர் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருக்க வேண்டும். கச்சத்தீவு குறித்து மோடியும், பாஜவும் உண்மையைப் பேசாமல் மக்களை திசை திருப்பி வருகிறார்கள்…’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் நிச்சயம் அண்ணாமலை மாட்டிக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. வேடிக்கை பார்க்கலாம்.