ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லை! வயதான பெற்றோர்! காமெடி நடிகரின் பரிதாப நிலை! காரணம் இது தான்!

ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல், வயதான பெற்றோரை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வரும் காமெடி நடிகரின் பரிதாப நிலை காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.


ஓசூர் அருகே சிவலிங்கபுரம் என்ற மலை கிராமம் அமைந்துள்ளது. இதுதான் காமெடி நடிகர் பரந்தாமனின் ஊராகும். இவருக்கு 27 வயது ஆகிறது. இவரோடு 4 பேர் உடன் பிறந்தவர்கள் ஆவர். அதில் மூவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இவருடன் இவரது பெற்றோர் மற்றும் மற்றொரு சகோதரர் ஆகியோருடன் இருந்து வருகின்றனர். எலும்பு முறிவு ஏற்பட்ட தாய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவரது சகோதரன் சகாதேவனும் மாற்றுத்திறனாளி ஆவார். 

இவர்களது குடும்பத்திற்கு பரந்தாமன் தான் தன்னால் முயன்றதை சம்பாதித்து கொடுத்து வந்துள்ளார். இவர் சிறுவயதில் இருந்தே நாடகம் தெருக்கூத்து உள்ளிட்டவைகளில் நடித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சினிமாக்களிலும் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்று உள்ளார். எம்ஏ சினிமா படித்துள்ள பரந்தாமன் உடல் வளர்ச்சி குறைந்து காணப்பட்டாலும் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் பலரது உள்ளங்களையும் கவர்ந்த நடிகராக வலம் வருகிறார். இத்தகைய பாராட்டுக்களைப் பெற்ற இந்த நடிகர் கடந்த சில தினங்களாகவே ஒரு வேளை உணவுக்குக் கூட பணம் இல்லாமல் தன் குடும்பத்தினரை வைத்து கொண்டு அவதிப்பட்டு வருகிறாராம்.

சமீப காலமாகவே சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வருகிறார் பரந்தாமன். ஆனால் தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வேலை இல்லாமல் பணத்திற்கு கஷ்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஒரு வேளை உணவிற்குக் கூட பணம் இல்லாமல் பரந்தாமனும் அவரது குடும்பத்தினரும் கஷ்டப்பட்டு வருவதாக கூறியுள்ளார். ஆகையால் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் நிரந்தர வருமானம் கிடைக்க எவரேனும் உதவி செய்ய இயலுமா என்று அவர் கேட்டிருக்கிறார். நகைச்சுவை நடிகரின் இத்தகைய சோகமான நிலை பலரது நெஞ்சங்களையும் பதைபதைக்க வைத்துள்ளது.