பேத்தி வயது நடிகையுடன் டூயட்! ரஜினியை ஜெயம் ரவி மூலம் பங்கம் செய்த வைரமுத்து மகன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பாடல் ஒன்றின் மூலம் மீண்டும் வம்புக்கு இழுத்து உள்ளனர் கோமாளி திரைப்படக்குழுவினர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு  கோமாளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரஜினி ரசிகர்களை மிகுந்த கோபத்தில் ஆழ்த்தியது. அந்த ட்ரெய்லரில் இடம்பெறும் ரஜினியை கிண்டல் அடிக்கும் காட்சிகள் நீக்கப்படும் திரைப்படக் குழுவினர் சார்பில்  என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது .

இப்படி இருக்க மீண்டும் ஒரு புதிய  சர்ச்சையை கிளப்பியுள்ளது கோமாளி திரைப்படம். "சூப்பர் ஸ்டாரு  ஜோடி எல்லாம் பாட்டி  ஆகிடுச்சே ..இப்போ பேத்தியெல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்தாச்சு" என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற பாடல் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது 

கோமாளி படத்தின் டிரெய்லரில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புகளைப் பற்றிய காட்சிகள் காமெடியாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த காட்சிகளை நீக்க வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனக் குரல் எழுப்பினர்.  

அதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க முன்வருவதாக படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் நேற்று அறிவித்திருந்தனர்.  

இந்நிலையில் தற்போது கோமாளி படத்தின் பாடல் ஒன்று நடிகர் ரஜினியின் வயதை கேலி செய்யும் விதமாக அமைந்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்க தொடங்கியிருக்கின்றனர்.  

அந்தப் பாடலில் நடிகர் ரஜினியோடு கதாநாயகியாக நடித்த நடிகைகள் தற்பொழுது பாட்டி வயதை அடைந்து விட்டதாகவும்,  அவருக்கு பேத்தி வயதுடைய நடிகைகள் ஜோடியாக சேர்ந்து நடிக்க வந்து விட்டதாகவும் அந்தப் பாடலில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.  

ட்ரெய்லர் சர்ச்சை முடிவுக்கு வந்த மறு நாளிலேயே பாடல் சர்ச்சை எழுந்துள்ளதால் கோமாளி படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரஜினியின் ரசிகர்கள் பெரும் கண்டனக் குரலை கோமாளி படத்திற்கு எதிராக எழுப்பி வருகின்றனர்