வீட்டில் தனிமையில் இருந்த மாணவி செய்த விபரீத செயல்! நேரில் பார்த்த தாய் அதிர்ந்து மயங்கிய பயங்கரம்!

நித்திரவிள்ளை பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Lநித்திரவிளை பகுதிக்கு அருகே சின்னத்துரை என்னும் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இங்கு கிறித்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் பாரம்பரிய தொழிலான மீன்பிடி தொழிலை செய்து வருகிறார். இவர் மனைவியின் பெயர் கீதா. கீதா அருகில் உள்ள ஹோட்டலில் சமையல் தொழில் செய்து வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.  முதல் மகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் படித்து வருகிறார். இளைய மகள் மார்த்தாண்டம் என்னும் பகுதியில் படித்து வருகிறார். மூன்றாம் ஆண்டில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். 

நேற்று கிறித்துதாஸ் வழக்கம்போல மீன் பிடிக்கச் சென்றார். கீதாவும் அருகில் உள்ள ஹோட்டலில் சமையல் வேலைக்கு சென்று விட்டார். கீதா மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அனுதாஸ் தூக்கில் தொங்கியிருந்தார். இதனை பார்த்து அதிர்ந்த தாய் மயங்கி சரிந்தார். அருகில் இருந்தவர்கள் நித்திரவிளை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அனுதாஸின் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலையின் காரணத்தை அறிந்து கொள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.