கன்னியாகுமரி மூகாம்பிகை மெடிக்கல் காலேஜால் மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்! ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவு!

கல்லூரியில் படிக்கும் மாணவருக்கு தவறாக நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்பட்டதற்காக 20 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்ரீமூகாம்பிகை மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பாலசுந்தரராஜ் என்பவர் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்தார். பயிற்சி மட்டுமே அவர் முடிக்க வேண்டியிருந்தது.

எதிர்பாராவிதமாக பாலசுந்தரராஜின் பெற்றோர் கிறித்துவக் கல்லூரியின் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் தன்னுடைய பயிற்சியினை அங்கு மேற்கொள்வதற்காக தன்னுடைய சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் திருப்பி தருமாறு கேட்டுள்ளார். 

ஆனால் கல்லூரி நிர்வாகம் இவருக்கு சான்றிதழ்களை வழங்கவில்லை. இதனால் இவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்லூரி நிர்வாகத்திடம் 75 ஆயிரம் பணத்தை செலுத்தி சான்றிதழ்களை திருப்பிப் பெற்றுக கொள்ளுமாறு பாலசுந்தரராஜனுக்கு உத்தரவிட்டனர்.

பணத்தை கட்டிய பாலசுந்தர்ராஜன் தன்னுடைய சான்றிதழ்களை பெற்றுக கொண்டார். ஆனால் உள்நோக்கத்துடன் கல்லூரி நிர்வாகமானது அவருடைய நன்னடத்தை சான்றிதழில் "திருப்திகரமாக இல்லை" என்று எழுதி கொடுத்து அனுப்பியுள்ளது. 

இதனால் பாலசுந்தரராஜனின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி விட்டது. மீண்டும் நுகர்வோர் நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது  பாலசுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தேவையான பணத்தை மாணவர் செலுத்தி விட்டபோதும் கல்லூரி நிர்வாகம் நடந்துக்கொண்டுள்ள விதம் கண்டிக்கத்தக்கது.

கல்லூரி நிர்வாகம் தேவையில்லாமல் நன்னடத்தை சான்றிதழ் தவறு செய்து விட்டது. உள்நோக்கத்துடன் மாணவனின் வாழ்க்கையை அழிப்பது சட்ட விரோதமாகும். மாணவரின் எதிர்காலத்தை சீர் செய்யும் வகையில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடும் 10 ஆயிரம் ரூபாய் வழக்குக்காகவும் மாணவனுக்கு அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

இந்த சம்பவமானது கன்னியாகுமரி நீதிமன்றத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.