சாலையின் குறுக்கே சடன் பிரேக் போட்ட ஏவிஎஸ் காலேஜ் பஸ்! படுவேகத்தில் மோதிய அரசு பஸ்! கதறித் துடித்த 35 பேர்! சேலம் பரபரப்பு!

அரசு பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்து மோதிக்கொண்டதில் 35 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் அயோதியாபட்டினம் என்று இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள ராமலிங்கபுரத்தில் ஏவிஎஸ் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியின் பேருந்து அழகு நகைகடை ஏற்றிக்கொண்டு சேலத்திலிருந்து கல்லூரியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது சேலத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று விரைந்து வந்து கொண்டிருந்தது. அயோத்தியாபட்டினம் அதே வந்துகொண்டிருந்தபோது வலது பக்கமாக திரும்பி சாலையை கடக்க முயன்றது.

அரசு பேருந்து வலது புறத்தில் திரும்புவதை கவனிக்காமல் கல்லூரி பேருந்து விரைந்து வந்து அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் அரசு பேருந்தின் பக்கவாட்டு கடுமையாக சேதம் அடைந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகளும், கல்லூரி பேருந்தில் பயணம் செய்த 5 பயணிகளும் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அரசுப்பேருந்து திரும்பியதை கவனிக்காமல் கல்லூரி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அயோத்தியாப்பட்டிணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.