மருமகனுடன் பைக்கில் ஏறிய மாமியார்! அடுத்த சில நிமிடங்களில் அரங்கேறிய பகீர் சம்பவம்! திருப்பூர் பரபரப்பு!

இருசக்கர வாகனத்தின் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் உயிரிழந்திருப்பது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் கல்லாங்காடு எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பார்வதி என்ற பெண் வசித்து வந்தார். இவருடைய மருமகனின் பெயர் கருப்பசாமி. இருவரும் இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்தை பார்ப்பதற்காக சிவன்மலைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

சந்திராபுரம் எனும் இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக தனியார் கல்லூரியின் பேருந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மோதிய அதிர்ச்சியில் கீழே விழுந்த பார்வதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் கருப்பண்ணன் படுகாயமடைந்தார்.

உடனடியாக பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பார்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரை தேடினர். சில மணி நேரங்களிலேயே அவரே காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.