தி.மு.க.வுக்குக் கொடுத்த ஆதரவை திரும்பப்பெற்ற கூட்டணிக் கட்சிகள்... திடீர் திருப்பம்.

அ.திமு.க.வில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என்பதால், நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் மற்றும் தமிமூன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக் கட்சி ஆகியவை தங்கள் ஆதரவை விலக்கியுள்ளன.


நேரடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தலை சந்திக்க முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் பல முறை முயற்சி செய்தார். மேலும், அவர் கட்சிக்கு மூன்று தொகுதிகள் வரை எதிர்பார்த்தார். 

ஆனால், முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகுதான் குட்டிக் கட்சிகளுடன் பேச முடியும் என்று அ.தி.மு.க. மறுத்துவிட்டது. ஆகஏ, கருணாஸ், தமிமூன் அன்சாரி ஆகிய இருவரும், திடீரென தங்கள் ஆதரவை தி.மு.க.வுக்கு வழங்கினார்கள்.

ஆனால், அதன்பிறகுதான் தங்கள் சொந்த மக்களிடம் இதற்கு மதிப்பு இல்லை என்பதை இருவரும் உணர்ந்தனர். ஆகவே, உடனடியாக தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர். ஆகவே இருவரும் மீண்டும் அ.தி.மு.க.வுக்குத்தான் வந்து சேர்வார்கள் என்று தெரியவந்துள்ளது.