மாமண்டூர் கல்லூரி வாயிலில் பெண்மணி சடலம்..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்! பரபரப்பு சம்பவம்!

தனியார் கல்லூரியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பெண் மர்மமான முறையில் இறந்திருக்கும் சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் ஒச்சேரி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள மாமண்டூரில் சரஸ்வதி என்ற 55 வயது பெண் வசித்து வந்தார்.  ஓச்சேரியிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் விடுதி பணியாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு சென்ற அவர் இரவு வரை வீடு  திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை சரஸ்வதியின் உடல் மாமண்டூர் சாலையோரத்தில் சடலமாக கிடந்துள்ளது. இதனையறிந்த சரஸ்வதியின் மகளான கலா மாமண்டூர் காவல் நிலையத்தில் நடந்தவற்றைக் கூறி புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரஸ்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சரஸ்வதியின் உடலை வாங்கி கொண்ட அவருடைய உறவினர்கள். நேரடியாக இறுதி சடங்கு செய்யாமல் அவர் பணியாற்றி வந்த கல்லூரிக்கு எடுத்து சென்றனர். நேற்றிரவு 7 மணியிலிருந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். நள்ளிரவு 1 மணி வரை போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. அதன்பிறகு கல்லூரி வளாகத்திலிருந்து கூட்டம் கலைந்தது.

இந்த சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.