மக்களவையை போல் மாநிலங்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக மாநிலங்களவையில் நேற்றையதினம் நிறைவேற்றப்பட்டது.


இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய நிலையில் தற்போது அதனை மாநிலங்களவையிலும் நேற்றைய இரவு 8 மணி அளவில் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளனர்.

இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் நிலவி வந்தன. இதனை எதிர்த்து காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், ஆகியோரும் வாதிட்டனர். இருப்பினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த சட்டத் திருத்த மசோதாவை ஏற்றுக்கொண்டதால் நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து மாநிலங்களவையில் நேற்று இரவு 8 மணி அளவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 125 எம்பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இதைப்பற்றி மாநிலங்களவை உறுப்பினர்கள் விவாதம் செய்ய சுமார் ஆறு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து பல தலைவர்களும் கடுமையாக விவாதம் செய்தனர்.

 இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. பெரும்பான்மையானோர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததால் வெற்றிகரமாக இந்த மசோதா லோக்சபாவில் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.