உலகையே மிரட்டும் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த திரைப்படம்! வெளியானது அதிரி புதிரி டீசர்!

பிரபல ஆங்கில திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த திரைப்படமான "டெனட் " திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் நோலன் ஒரு சிறந்த நடிகர், தயாரிப்பாளர் , இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவரது  "மெமன்டோ" திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. மேலும்,  இன்டர்ஸ்டெல்லார், இன்செப்ஷன்  போன்ற பல வெற்றி திரைப்படங்களையும் கிறிஸ்டோபர் நோலன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தற்போது கிறிஸ்டோபர் நோலன் டெனட் என்ற திரைப்படத்தை தீவிரமாக இயக்கி வருகிறார் . இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த வியாழக்கிழமை அன்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

புதிய திரைப்படத்தின் டீசர் யூட்யூபில் தான் வெளியிடப்படும் . ஆனால் ஒரு புதுவித மாற்றாக கிறிஸ்டோபர்  அவரது டெனட்  திரைப்படத்தின் டீசர் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தியேட்டர்களில் படம் பார்த்துக்கொண்டிருந்த மற்ற ரசிகர்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 40 வினாடிகள் கொண்ட இந்த டீசரில் நடிகர் ஜான் டேவிட் உடைந்த கண்ணாடி துண்டுகளின் மீது நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ராபர்ட் பாட்டிசன் ,  

எலிசபெத் , டெம்பிள் கபாடியா  , மைக்கேல்   மற்றும்  கென்நெட்  போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது மொத்தம் ஏழு நாடுகளில் நடத்தப்படுகிறது . 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த திரைப்படத்தில்  கபாடியாவின்  தோற்றம் இணையத்தில் கசிந்தது . தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது எஸ்டோனியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் த்ரில்லரை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்த டெனட் திரைப்படம் வரும் ஜூலை 17, 2020ல் வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.