சோ பாராட்டிய கேள்வி மன்னன்

மேயராக சைதை துரைசாமி செய்த பணிகளை பட்டியலிடும் நேரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த யாதவராமன் கூறிய சில கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அவர் சைதை துரைசாமி பற்றி கூறியவற்றில் இருந்து சில தகவல்கள் மட்டும் தருகிறேன்.


மேயராக சைதை துரைசாமி செய்த பணிகளை பட்டியலிடும் நேரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த யாதவராமன் கூறிய சில கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அவர் சைதை துரைசாமி பற்றி கூறியவற்றில் இருந்து சில தகவல்கள் மட்டும் தருகிறேன்.

‘’நேர்மை என்பதை நான் சைதை துரைசாமியிடம்தான் முதன்முதலில் கண்டேன். தேர்தல் செலவுக்காக வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் கட்சி நிதியைக்கூட வாங்கமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து தன் சொந்தப் பணத்தை செலவு செய்தார். தேர்தல் நிதி என்று யாரிடமும் வாங்கமாட்டார். தொகுதி முழுவதும் வீடு வீடாக ஏறி இறங்கித்தான் ஓட்டு கேட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தார். .

பதவிக்கு வந்ததும் தொகுதியை மறந்துவிடும் அரசியல்வாதிகள் மத்தியில், இவர் மட்டும்தான் ஜெயித்த பிறகும் வீடுவீடாக சென்று குறை கேட்டார். அவர் செல்ல முடியாத இடங்களுக்குப் பிரதிநிதிகளை அனுப்பி குறைகளை நோட்டு புத்தகத்தில் பதிவுசெய்து, அந்தக் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வார். சட்டசபையில் அதிக கேள்விகள் கேட்டு, கேள்வி மன்னன் என்று சபாநாயகரால் பாராட்டப்பெற்றவர். கவன ஈர்ப்பு தீர்மானம், மானியக் கோரிக்கை, விவாதங்கள் என்றாலே சைதையின் குரல் நிச்சயம் கேட்கும். சட்டசபைக்கு விடுப்பே போடாமல் ஆஜரானவர். அதனால்தான் மறைந்த பிரபல பத்திரிகையாளர் சோ, ‘மக்கள் பிரதிநிதி என்ற சொல்லுக்கு உரியவர் சைதை துரைசாமிதான். எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றி பெறும் வரையில் உழைத்துக்கொண்டே இருப்பார்’ என்று பாராட்டியுள்ளார்’’ என்றவர் அடுத்தபடியாக மனிதநேய அறக்கட்டளை குறித்து கூறிய தகவல்களை நாளை பார்க்கலாம்.