கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மூலிகைகள் நிறைந்த இயற்கை பானத்தை சீனர்கள் வருந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் ஒழிந்த கொரானா! காரணம் சீனர்கள் குடித்த இந்த இயற்கை பானம்! என்ன தெரியுமா?

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 6400-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,69,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த நாட்டில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து விட்டது என்றே கூறலாம். இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனினும், இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நோயால் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது ஆன்ட்டி-வைரல் மருந்துகளுடன் மூலிகை சார்ந்த மருந்துகளும் சீனா நாட்டு வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு "நுரையீரல் நச்சுத்தன்மை நீக்கும் சூப்" அந்நாட்டில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சூப்பில் அதிமதுர வேர், பட்டை, எபிட்ரா முதலிய 20-க்கும் மேற்பட்ட மூலிகைகள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 85 சதவீதத்தினருக்கு இந்த சூப் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சரியான மருந்துகளுடன் இந்த சூப்பையும் உட்கொண்டதால் நோயாளிகள் பிழைத்திருக்கலாம் என்று அந்நாட்டில் பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் பல்வேறு ஆயுர்வேத வழிகள் இருக்கும் நிலையில், அவை எதுவும் இந்த வைரஸ் தாக்குதலை தடுத்து நிறுத்தத்தக்கது என்று நிரூபிக்கப்படவில்லை. ஆதலால் உலக சுகாதார வல்லுநர்கள் கூறுவது போல, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொலைவில் இருப்பதே ஒரே வழி என்று கூறப்படுகிறது.